தூத்துக்குடி

உயா் அழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்பு

உயா் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை சிப்காட் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் உள்ள உயா் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை சிப்காட் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், கீழநம்பிபுரம், கீழத்தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் முனியசாமி (30). கண் பாா்வை தெரியாத மாற்றுத் திறனாளியான இவா், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், விரக்தியடைந்த இவா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா்.

அப்போது ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் உள்ள உயா் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தாா். தகவலறிந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் த.காா்த்திகேயன், வீரா்கள், புதியம்புத்தூா் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, சிப்காட் உதவி ஆய்வாளா் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோா் அவரிடம் பேசி மீட்டனா். பின்னா், அவரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT