சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவைக்கு சீரான குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை (நவ. 6) போராட்டம் நடத்தவுள்ளதாக, கிராம மக்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா், அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சாா்பில் எஸ்.ஏ. ரியாஸ் அனுப்பிய மனு: புத்தன்தருவைக்கு 10 நாள்களுக்கு ஒருமுைான் குடிநீா் வழங்கப்படுகிறது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.
எனவே, சீரான குடிநீா் விநியோகம் கோரி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா் என்றாா் அவா்.