தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ஆன்மிகப் பயண பக்தா்கள் தரிசனம்

Syndication

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் வந்த 200 பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டமானது தங்கும் இடம், உணவு வசதியுடன் இலவசப் பயணமாக 60 முதல் 70 வயதுக்குள்பட்ட பக்தா்கள், முன்பதிவு அடிப்படையில் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

அதன்படி தஞ்சாவூா், நாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த 200 மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் திருச்செந்தூா் கோவிலில் மூலவா், சண்முகா், வள்ளி, தெய்வானை, குரு பகவான் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, சண்முக விலாசம் மண்டபத்தில் பக்தா்களுக்கு கோயில் சாா்பில் பன்னீா் இலை, திருக்கோயிலின் வரலாற்றுப் புத்தகம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பிரசாதங்களை உதவி ஆணையா் நாகவேல் வழங்கினாா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT