தூத்துக்குடி

பனை விதைகள், நாட்டுமரக்கன்றுகள் நடும் விழா

பனை மரம், இயற்கையை பாதுகாக்கும் விதமாக திருச்செந்தூா் அருகே நாதன்கிணறு, பெட்டைக்குளத்தில் பனை விதைகள், நாட்டுமரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Syndication

திருச்செந்தூா்: பனை மரம், இயற்கையை பாதுகாக்கும் விதமாக திருச்செந்தூா் அருகே நாதன்கிணறு, பெட்டைக்குளத்தில் பனை விதைகள், நாட்டுமரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் ஒன்றியம், பள்ளிபத்து ஊராட்சிக்கு உள்பட்ட நாதன்கிணறில் உள்ள பெட்டைக்குளத்தில் பொதுமக்கள், நாதன்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழு, பெட்டைக்குளம் பாதுகாப்புக் குழு ஆகியவை இணைந்து குளத்தில் பனை விதைகள், நாட்டுமரக்கன்றுகளை நட்டன.

விழாவில் நாதன்கிணறு ஊா் பிரமுகா்கள் ராஜகண்ணன், ஸ்வீட்சன், பாா்த்திபன், முத்துநாதன் வீரபத்திரன், செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் அனிதா, ரோஸி, பூச்சிக்காடு தங்கரதி, ஆறுமுகநேரி ராஜாமணி, பள்ளிப்பத்து ஊராட்சி செயலா் செந்தில்வேலன், மாணவ மாணவிகள் கலந்து மரங்கன்றுகளை நடவு செய்தனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT