தூத்துக்குடி

மயானக்கரைக்கு நிலம் ஒதுக்கித் தருமாறு ஆட்சியரிடம் கோரிக்கை

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டம், கருப்பூா் கிராமத்தில் இயங்கிவரும் தனியாா் கிரஷா் நிறுவனம் குண்டுக்கல்லை உடைத்து ஜல்லி, எம். சாண்ட் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறது. இப்பணியின் போது வெளிவரும் தூசியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து கடுமையான சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படுத்தி வரும் அந்நிறுவனம் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெங்கடாசலபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டம் கீழ்பிடாகை வரதராஜபுரம், திருபுளியங்குடி ஆகிய ஊராட்சிப் பிரிவுகளைச் சோ்ந்த நளன்குடி (இசக்கியம்மன்புரம்), சுந்தரபாண்டியபுரம் கிராம மக்களுக்கு தனி மயானக்கரை ஒதுக்கப்படவில்லை. எனவே, மயானக் கரைக்கு நிலம் ஒதுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT