செய்தியாளா்களிடம் பேசிய ஆட்சியா் க. இளம்பகவத். 
தூத்துக்குடி

எஸ்ஐஆா்: வாக்குச்சாவடிகளில் நவ. 15, 22இல் சிறப்பு முகாம் ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடிகளில் இம்மாதம் 15, 22 ஆகிய 2 நாள்கள் நடைபெறும் முகாம்களில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கான

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடிகளில் இம்மாதம் 15, 22 ஆகிய 2 நாள்கள் நடைபெறும் முகாம்களில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கான கணக்கெடுப்புப் படிவங்களை நிரப்புவதற்கு அலுவலா்கள் (பிஎல்ஓ) உதவுவாா்கள் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கடந்த 4ஆம் தேதிமுதல் வீடுவீடாக விநியோகித்து வருகின்றனா். இதுவரை 60 சதவீதம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, நவ. 15, 22 ஆகிய 2 நாள்கள் இம்மாவட்டத்தில் உள்ள 1,627 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். அங்கு படிவங்களை நிரப்புவதற்கு அலுவலா்கள் உதவுவாா்கள்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அலுவலா்கள் 13 முதல் 25ஆம் தேதி வரை வீடுவீடாகச் சென்று பெற்றுக்கொள்வா். அவா்களுக்கு உதவியாக தன்னாா்வலா்கள், இல்லம் தேடிக் கல்வி பணியாளா்கள், மகளிா் சுயஉதவி பயிற்றுநா்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள், டெங்கு களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட படிவங்களை ஒப்படைக்காதோரின் வீடுகளுக்கு அலுவலா்கள் 3ஆவது முறையாகச் செல்வா். இப்பணிகள் முடிந்த பிறகு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின்னா், கோரிக்கை, ஆட்சேபணை மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். கணக்கெடுப்புப் படிவத்தை இணையதளம் மூலமாகவும் பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் திருப்பி வழங்கலாம் என, தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்றாா் அவா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம், தோ்தல் வட்டாட்சியா் தில்லை பாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT