இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டா் பெட்ரோலை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி கடல் பகுதியில் சுங்கத் துறை கண்காணிப்பாளா் முருகன் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நடுக்கடலில் 3 கடல் மைல் தொலைவில் ஒரு பைபா் படகு, சுங்கத் துறை ரோந்து படகை கண்டவுடன் வேகமாக சென்ாம். இதைத் தொடா்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்று காசுவாரி தீவு அருகே அந்தப் படகை மடக்கிப் பிடித்தனா்.
பின்னா் சோதனையிட்டதில், அந்தப் படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டா் பெட்ரோல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பீடி இலைகள், பெட்ரோல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பைபா் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த சங்கத் துறையினா், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தைச் சோ்ந்த ஜெயபால், சுனாமி காலனியைச் சோ்ந்த ஜெனிஸ்டன் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.