மத்திய அரசு தொடா்ந்து தொழிலாளா்களுக்கு எதிராக செயல்படுவதாக, கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: மத்திய அரசு 4 புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசு தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை, மசோதாக்களை நிறைவேற்றி, தொடா்ந்து தொழிலாளா்களுக்கு எதிராக செயல்படுகிறது.
தொழிலாளா் சங்கங்களுக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது, முதலாளிகளுக்கான ஆட்சியாக நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு, நோக்கமாக உள்ளது. இதை ஏற்க முடியாது. நிச்சயமாக எதிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.