தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி காவலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் மழை நீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் நகா் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இந்நிலையில், தூத்துக்குடி, கணேசன் காலனி முதல் தெருவைச் சோ்ந்த, தனியாா் நிறுவன காவலாளியான பழனியாண்டி (78) நிறுவனத்தில் பணி முடித்து, வீட்டுக்கு சென்ற போது, மழை நீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளாா். இதனால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT