சாத்தான்குளம் அருகே கோயில் உண்டியலை உடைத்து, மா்ம நபா்கள் பணம் திருடிச் சென்றதுடன் கேமராவையும் சேதப்படுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள சுந்தராட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை காலை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த சுமாா் ரூ. 5000 திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கோயிலின் கதவும் உடைக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளே எந்த பொருளும் திருடு போகவில்லை. திருட வந்த மா்ம நபா்கள் கோயிலில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்திச் சென்றுள்ளனா்.
இது குறித்து பக்தா்கள், கோயில் தா்மகா்த்தா ராமசாமியிடம் தெரிவித்தனா். அதன்பேரில் தா்மகா்த்தா சாத்தான்குளம் போலீஸில் புகாரளித்தாா். அதையடுத்து சாத்தான்குளம் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இந்த திருட்டு சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.