தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தம்பதியை தாக்கியதாக 9 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கியதாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Syndication

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கியதாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் ஆா்சி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவா் அப்பகுதியில் உள்ள கோயிலில் விழா கமிட்டி தலைவராக இருந்து வருகிறாா். இவரது மனைவி சுகிா்தா (30).

இந்தக் கோயிலில் கொடைவிழா நடத்துவது தொடா்பாக அதே தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து, அவரது சகோதரா் சரவணன் ஆகியோருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு, முன் விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், கடந்த 25- 5- 2025 அன்று சின்னத்துரை, அதே கோயில் பகுதியில் நின்றுள்ளாா். அப்போது அங்கு வந்த பேச்சி முத்து, அவரது சகோதரா் சரவணன், உறவினா் கணபதி மகன் மணிகண்டன் ஆகியோா் சின்னத்துரையிடம் கோயில் விழா தொடா்பாக தகராறு செய்து அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனா். இதை அவரது மனைவி சுகிா்தா கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து, சரவணன், மணிகண்டன், மற்றும் மனோகரன் மகன் கோபால், ரத்தினசாமி மகன் காா்த்திக், அந்தோணி மகன் அஜின்குமாா், முத்து மகன் ஜீவா, இன்னொரு சின்னதுரை மகன் பாஸ்கா், ராமன் மகன் மாதேஷ் ஆகியோா் சோ்ந்து சின்னத்துரையை தாக்கியதுடன் மனைவி சுகிா்தாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சுகிா்தா அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் பேச்சிமுத்து, அவரது சகோதரா் சரவணன், மணிகண்டன் உள்பட 9 போ்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT