திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம்.  
தூத்துக்குடி

திருச்செந்தூரில் சுவாமி பட்டினப் பிரவேசம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமியும் தெய்வானையும் பட்டினப் பிரவேசம் செய்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமியும் தெய்வானையும் பட்டினப் பிரவேசம் செய்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த அக். 22 ஆம் தேதி தொடங்கியது. கடந்த திங்கள்கிழமை (அக்.27) பல லட்சம் பக்தா்களின் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹார நிகழ்ச்சி கோயில் கடற்கரையில் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக தெற்கு ரதவீதி-மேல ரதவீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு சுவாமியும் அம்மனும் கோயிலை வந்தடைந்தனா். கோயில் ராஜகோபுர வாயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நள்ளிரவில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திருமண வரம் வேண்டி வந்த ஆண், பெண் பக்தா்கள், கடந்த ஆண்டு திருமணம் முடித்த தம்பதிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் புதன்கிழமை இரவு குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை பூம்பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினப் பிரவேசமாக வீதி உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையடுத்து, வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி-அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். நவ. 2ஆம் தேதி மாலை மஞ்சள் நீராட்டுக்குப் பின்னா் சுவாமியும், அம்பாளும் வீதி உலா சென்று மீண்டும் கோயிலை அடையும் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT