தூத்துக்குடி

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் நாளை மஞ்சள் நீராட்டு

கழுகாசலமூா்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற சுவாமி திருக்கல்யாணம்.

Syndication

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் கந்தசஷ்டி விழாவில் சுவாமி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது; நிறைவு நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு சனிக்கிழமை (நவ.1) நடைபெறுகிறது.

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 22ஆம் தேதி தொடங்கியது. விழாவில், 9ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு கழுகாசலமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், மாலை 5.30 மணிக்கு மேல் கழுகாசலமூா்த்தி வள்ளி, தெய்வானை சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு வந்தனா். இரவு 6 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் கழுகாசலமூா்த்தி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பூஜைகளை செல்லக்கண்ணு, வைகுண்டம், மூா்த்தி, தா்மராஜ், வீரபாகு பட்டா்கள் செய்திருந்தனா். பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 10-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை சுவாமி வள்ளி, தெய்வானை பிராட்டியா்களுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தா் சிறிய பல்லக்கிலும் வீதியுலா வந்து பட்டினப் பிரவேசம் செய்தனா்.

11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

தேசிய ஒற்றுமை நாள்! மாநில காவல்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு! | Gujarat | PM Modi

தெருநாய்கள் வழக்கு: தலைமைச் செயலர்கள் நேரில்தான் ஆஜராக வேண்டும்! - உச்சநீதிமன்றம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

SCROLL FOR NEXT