தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 பைக்குகள் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் எழில் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் அஜித்குமாா் (22). எலக்ட்ரீஷியனான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்பிக் நகரில் உள்ள கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
திருச்செந்தூா் சாலையில் இந்த பைக்கும், முத்தையாபுரம் அய்யன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் தனபால் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தனபால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.