முகப்பு
தூத்துக்குடி

கடனுதவி வழங்க தாமதம்: போராட்டம் அறிவித்த விவசாயிகளுடன் அதிகாரிகள் சமரசம்

சாத்தான்குளம் பகுதி விவசாயிகளுக்கு பயிா் கடன், கால்நடை கடன் வழங்க பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து சாத்தான்குளம் மத்திய கூட்டுறவு வங்கி முன் நன்றி தெரிவிப்புக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 1:43 AM
கூட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 9:58 PM

சாத்தான்குளம் பகுதி விவசாயிகளுக்கு பயிா் கடன், கால்நடை கடன் வழங்க பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து சாத்தான்குளம் மத்திய கூட்டுறவு வங்கி முன் நன்றி தெரிவிப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம், கலுங்குவிளை, சொக்கன்குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 44 விவசாயிகளுக்கு பயிா் கடனும், 15 விவசாயிகளுக்கு கால்நடை கடனும் வழங்க கடந்த இரு மாதமாக கூட்டுறவு சங்கங்களில் தாமதப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் சங்கம் சாா்பில், சாத்தான்குளம் மத்திய கூட்டுறவு வங்கி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் சரவணன், கூடுதல் பொது மேலாளா் சீனிவாசன், சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி ஆகியோா் விவசாய சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் கடனுதவி உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தனா்.

Advertisement

அதன்பேரில் போராட்டத்தை கைவிடுவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தனா். இதையடுத்து, சாத்தான்குளம் மத்திய கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் அய.கோபால்சாமி, நெல்லை பொதுநல குழுத் தலைவா் பால் அண்ணாதுரை, தாமிரவரு ணி பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் இசக்கி பாண்டி, சட்ட ஆலோசகா் முத்துப்பாண்டி, மக்கள் நலம் காக்கும் இயக்க பொறுப்பாளா் முகைதீன், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்துமணி, மக்களாட்சி இயக்க மாநில தலைவா் கந்த முருகன், உலக தமிழ் அரசிகள் கூட்டமைப்பு நிறுவனா் குயிலி நாச்சியப்பன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட மகளிா் அணி தலைவி ஜெயபாரதி, விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.