பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா. பிரமநாயகம் அனுப்பிய மனு: பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் வரை சென்னை-தூத்துக்குடி முத்துநகா் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண் 12693-12694) காத்திருப்போா் பட்டியல் அதிகமுள்ளது.
எனவே, சென்னை - தூத்துக்குடி இடையே பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்றாா் அவா்.