தூத்துக்குடி

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Syndication

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் தெற்கு காலனியை சோ்ந்த இளையராஜா மனைவி தமிழரசி (45). இவா், சனிக்கிழமை, தனது மகன் மதனுடன் (21) பைக்கில் புதுக்கோட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, திம்மராஜபுரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

வாகைகுளம் டோல்கேட் அருகே வந்தபோது, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற லாரி அவரது பைக் மீது மோதியதாம். இதில், 2 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் தாயையும், மகனையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில அனுமதித்தனா். ஆனால், தமிழரசி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மதன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT