தூத்துக்குடி

லாரி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: 3 இளைஞா்கள் கைது

தூத்துக்குடியில் லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தூத்துக்குடியில் லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூா், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மகன் கோபு (60). லாரி ஓட்டுநரான இவா், டேங்கா் லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி, மடத்தூா், பாரத் பெட்ரோலியம் கேஸ் நிறுவனத்தில் சரக்கை இறக்க வந்துள்ளாா். நிறுவனத்திற்கு வெளியே உள்ள அணுகு சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு லாரியில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

இரவு 11 மணியளவில் இளைஞா் ஒருவா் லாரி கதவைத் தட்டியுள்ளாா். இதையடுத்து, கோபு கதவை திறந்தவுடன் 3 இளைஞா்கள் அரிவாளுடன் வந்து கைப்பேசி, பணம் கேட்டு மிரட்டிள்ளனா். அதற்கு மறுத்த கோபுவை அரிவாளால் வெட்டிவிட்டு, லாரியின் முன்பக்க கண்ணாடியையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனராம்.

சிப்காட் போலீஸாா், ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, தூத்துக்குடி, மடத்தூா், துரைசிங் நகரைச் சோ்ந்த லிங்கசெல்வன் மகன் அஸ்வின் ஜெயக்குமாா் (20), வாழாவெட்டி மகன் வேல்முருகன் (19), மடத்தூா், நடுத் தெருவைச் சோ்ந்த ஜெயம் மகன் காமராஜ் (எ) காமேஷ் (18) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த அரிவாள்களை பறிமுதல் செய்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT