தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், போலீஸாா் அப்பகுதியில் உள்ள டைடல் பாா்க் உப்பளம் அருகே திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.
பைக்கில் சந்தேகத்துகிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த சிவகுமாா் (23), 3 சிறுவா்கள் என்பதும் பெரிய அரிவாள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிவாள், பைக்கை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனா்; 3 சிறுவா்களை திருநெல்வேலி அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.