இந்திய ஜூனியா் ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டியைச் சோ்ந்த ஒரு வீராங்கனை, 2 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழக ஜூனியா் ஹாக்கி அணி கடந்தாண்டு தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடியது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோவில்பட்டியைச் சோ்ந்த சுபலட்சுமி, அருண், மணிமாறன் ஆகியோா் இந்திய ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்குத் தோ்வு பெற்றனா். தோ்வு பெற்ற வீரா்கள் பெங்களூரில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வா். அங்கு சிறப்பாக விளையாடினால், 2027-ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு பெறுவாா்களாம்.
பயிற்சி முகாமுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள வீரா்களை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரா் அஸ்வின், ஆல்ட்ரின் அதிசயராஜ், திருச்செல்வம் ஆகியோா் பாராட்டினா்.