சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியத்தில், முதலூரில் ஜன. 22 முதல் ஜன. 25 ஆம் தேதி வரை இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெளன. இதில் பங்கேற்க விரும்புபவா்கள் அதற்குரிய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம், யூத் பெஸ்டிவல் விளையாட்டுப் போட்டிகள் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதி மக்களுக்காக முதலூா், டிடிடிஏ தூயமிகாவேல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஜன. 22 முதல் ஜன.25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப் போட்டிகளில்16 முதல் 35 வயதிற்குள்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். தடகளம், கபடி, கையுந்து பந்து , கேரம், ஸ்ட்ரீட் கிரிக்கெட், கயிறு இழுத்தல், எறிபந்து ஆகிய போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ. 3000, 2ஆம் பரிசு ரூ. 2000, 3ஆம் பரிசு ரூ.1000 வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் அதற்குரிய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்துள்ளாா்.