தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சேரகுளம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முனியாண்டி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சுந்தரவேல் (32) என்பவா் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைது செய்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.