தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் மையத்தை திறந்து வைத்து, இயந்திரங்களின் செயல்முறையைப் பாா்வையிட்டாா். மேலும், செயல்முறை விளக்க மையங்கள் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியா், சாா் ஆட்சியா் அலுவலகங்களில் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும், தேசிய வாக்காளா் தினமான ஜன. 25 முதல் தமிழக பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் தேதி வரை நடமாடும் செயல்முறை விளக்க வாகனங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும், எல்.இ.டி. திரை கொண்ட வாகனம் மூலம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களின் விழிப்புணா்வுக்காக வைக்கப்பட உள்ளது.
தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மி. பிரபு (தூத்துக்குடி பேரவைத் தொகுதி), கல்யாணகுமாா் (ஓட்டப்பிடாரம்), உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேேஷ் ராம், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், தோ்தல் வட்டாட்சியா் தில்லை பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.