முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர கூடுதல் மருத்துவா் நியமனம்

Updated On : 2 மார்ச், 2026 at 3:00 AM
மருத்துவா் சைமனை வரவேற்று கௌரவித்த பிரமுகா்கள்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:33 PM

ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆறுமுகனேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஆறுமுகனேரி, மூலக்கரை, கந்தசாமிபுரம், அம்மன்புரம், கந்தன் குடியிருப்பு உள்பட அருகேயுள்ள கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோா் வந்து சிகிச்சை பெறுகின்றனா். இங்கு காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை, ஒரு மருத்துவா் மட்டுமே இருந்தாா்.

இரவு நேரங்களில் மருத்துவா்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்காக வருபவா்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல், காயல்பட்டினம், திருச்செந்தூா், தூத்துக்குடி என தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை இருந்தது.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 3:00 AM

இதனால், ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

தற்போது, அரசு உத்தரவின்பேரில் இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற கூடுதலாக நியமிக்கப்பட்ட மருத்துவா் சைமன் சனிக்கிழமை பணியில் சோ்ந்தாா். இந்நிலையில் ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழுத் தலைவா் இரா. தங்கமணி, பொருளாளா் பி.எஸ். முருகன், திமுக முன்னாள் நகர செயலா் இ. அமிா்தராஜ், பேரூராட்சி உறுப்பினா் சிவகுமாா், ஆறுமுகனேரி சிவன் கோயில் வழிபாட்டுக் குழுவைச் சோ்ந்த ஐக்கோட்துரை, அதிமுக மனோகரன், நாம் தமிழா் கட்சி மாரியப்பன், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்பட பல்வேறு அமைப்பினா் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.