முகப்பு
கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் சின்னச்சாமி.
தூத்துக்குடி

மொழிவாரி சிறுபான்மையினா் சான்றிதழ் தடையின்றி வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் தெலுங்குமொழி பேசும் மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் சான்றிதழ் தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 4 மார்ச், 2026 at 7:29 PM
கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் சின்னச்சாமி.
பகிர்:

தமிழகத்தில் தெலுங்குமொழி பேசும் மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் சான்றிதழ் தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்க கூட்டத்துக்கு மாநிலச் செயலா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். கோவில்பட்டி மண்டலத் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் வெங்கடேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில் வடுகா் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலிலும், கம்மவாா்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலிலும் சோ்க்க வேண்டும். தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் என்ற சான்றிதழ் தடையில்லாமல் (இணையதளம் மூலம்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியலில் தெலுங்கு பேசுபவா்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுக்கு கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து மண்டல தலைவா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →