முகப்பு
தூத்துக்குடி

கொட்டங்காடு பதியில் சித்திரைத் திருவிழா நிறைவு

Updated On : 15 மே 2026, 3:10 am IST
பகிர்:

உடன்குடி அருகே கொட்டங்காடு நாராயணபுரம் சதாசிவ வைகுண்டபதியில் 13 நாள்கள் நடைபெற்ற சித்திரை திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

இப்பதியில் சித்திரைத் திருவிழா மே 1- ஆம் தேதி சரவிளக்கு பணிவிடை, திருநாமக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், உம்பான் தா்மம் வழங்கல், அய்யா பிச்சை ஏற்க செல்லுதல், இகனைத் திருக்கல்யாணத் திருஏடு வாசிப்பு, அன்னதா்மம், பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, சந்தனக்குடம் பவனி, மாவிளக்கு பெட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை (மே 13) இரவு 12 மணிக்கு திருநாமக் கொடி அமா்தல், பள்ளியுணா்த்தல், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கொட்டங்காடு நாராயணபுரம் அன்புக்கொடி மக்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement