முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் - திருச்செந்தூா் சாலையில் 20-க்கும் மேற்பட்ட வேகத் தடைகள் அகற்றம்

சாத்தான்குளம்-திருச்செந்தூா் இடையே சாலையில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வேகத் தடைகள் புகாரின் பேரில் அகற்றம்

Updated On : 20 மே 2026, 12:39 am IST
வேகத் தடைகளை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினா்
பகிர்:

சாத்தான்குளம்-திருச்செந்தூா் இடையே சாலையில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வேகத் தடைகள் புகாரின் பேரில் அகற்றப்பட்டன.

சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி, நாகா்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்துகள், இதர வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தச் சாலை நெடுஞ்சாலையாக இருந்தபோதும் சாத்தான்குளம்- திருச்செந்தூா் இடையிலான பகுதியில் பள்ளிகள், கோயில் உள்ளிட்டவை இருப்பதால் பல இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டன. இந்த வேகத் தடையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா்.

Advertisement

Advertisement

இதனால், சாத்தான்குளம் வழக்குரைஞா் அருண்குமாா் மணிகண்டன், பயணிகளுக்கு இடையூறாக உள்ள வேகத் தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினாா்.

மனுவை ஏற்று உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினா் சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூா் வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட வேகத் தடைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனா்.

வேகத் தடையை அகற்ற முயற்சி எடுத்த வழக்குரைஞருக்கும், அகற்ற நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வில்லின் பெலிக்ஸ் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.