காரைக்காலில் தமுமுகவினர் முற்றுகைப் போராட்டம்
காரைக்கால், ஜன. 8: காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தோருக்கு பயிற்சி தர நடத்தப்பட்ட முன்மாதிரித் தேர்வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டதாகக் கூறி, காரைக்காலில் தமுமுகவினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்
திருச்சிகாரைக்காலில் தமுமுகவினர் முற்றுகைப் போராட்டம்
காரைக்கால், ஜன. 8: காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தோருக்கு பயிற்சி தர நடத்தப்பட்ட முன்மாதிரித் தேர்வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டதாகக் கூறி, காரைக்காலில் தமுமுகவினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்
காரைக்கால், ஜன. 8: காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தோருக்கு பயிற்சி தர நடத்தப்பட்ட முன்மாதிரித் தேர்வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டதாகக் கூறி, காரைக்காலில் தமுமுகவினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அரசு காவல் துறையில் உதவி ஆய்வாளர், காவலர், ஊர்க் காவல் படையில் பணிபுரிய ஆள்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இத் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்புத் துறையும் இணைந்து தேர்வுக்கான பயிற்சியை அளிக்கவுள்ளன. இப் பயிற்சி முகாம் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. முன்னதாக, இம் முகாமில் 100 பேருக்கு மட்டுமே பயிற்சி தரும் வகையில், விண்ணப்பித்தோரை அழைத்து முன்மாதிரித் தேர்வு நடத்தி 100 பேரை வேலைவாய்ப்புத் துறை தேர்வு செய்யது.
இவர்களில் முஸ்லிம் மாணவர்கள் ஒருவர்கூட இல்லையெனக் கூறி, தமுமுக சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்ற கல்லூரி முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து மாவட்ட துணை ஆட்சியர் செ. ஆபேல் ரொசாரியோ, வேலைவாய்ப்பு அதிகாரி ப. கீதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பயிற்சி வகுப்பில் உரிய முறையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தர ஏற்பாடு செய்வதாக அவர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.