கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
கரூர், ஜன. 8: அவசர அறுவைச் சிகிச்சைக்காக கரூர் ம. குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் சனிக்கிழமை ரத்த தானம் வழங்கினர். கரூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற அவசர அறுவைச் சிகிச்சை
கரூர், ஜன. 8: அவசர அறுவைச் சிகிச்சைக்காக கரூர் ம. குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் சனிக்கிழமை ரத்த தானம் வழங்கினர்.
கரூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற அவசர அறுவைச் சிகிச்சைக்காக "ஓ' பாசிட்டிவ், "பி' பாசிட்டிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது. இதுகுறித்து அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கி கரூர் ம. குமாரசாமி பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் 10 யூனிட் ரத்தம் தேவையென கேட்டுக் கொண்டது. இதையடுத்து, கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வ மாணவர்கள் உடனடியாக ரத்த தானம் வழங்கினர். இந்த ரத்தம் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது.
ரத்தம் வழங்கிய மாணவர்களையும், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பி. சுதாகரையும் கல்லூரித் தலைவர் ம. குமாரசாமி, செயலர் கு. ராமகிருஷ்ணன், முதல்வர் டி. வளவன், மேலாண்மைத் துறை இயக்குநர் ச. குப்புசாமி ஆகியோர் பாராட்டினர்.