திருச்சி

முதல் 3 இடங்களைப் பிடித்து பெருமை சேர்த்த திருப்பூர்!

திருப்பூர், மே 13: அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வகையில் தமிழகத்திலேயே முதல் 3 இடங்களை பிடித்துள்ள பெருமையை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. அதன்படி, திருப்பூர் வடக்கு, பல்லடம், அவிநாசி தொக

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், மே 13: அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வகையில் தமிழகத்திலேயே முதல் 3 இடங்களை பிடித்துள்ள பெருமையை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. அதன்படி, திருப்பூர் வடக்கு, பல்லடம், அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பெருமையை தட்டிச்சென்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. அதில், திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதில், திருப்பூர் வடக்கு தொகுதியில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக) 73,271 வாக்குகள் வித்தியாசத்திலும், பல்லடம் தொகுதியில் கே.பி.பரமசிவம் 69,776 வாக்குகள் வித்தியாசத்திலும், அவிநாசி (தனி) தொகுதியில் ஏ.ஏ.கருப்பசாமி 61,411 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன்மூலம், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் என்ற பெருமையை தமிழகத்திலேயே முதலிடத்தை திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தன், 2ம் இடத்தை பல்லடம் தொகுதி கே.பி.பரவசிவம், 3ம் இடத்தை அவிநாசி தொகுதி ஏ.ஏ.கருப்பசாமி ஆகியோர் பெற்றுள்ளனர்.

தவிர, மாவட்டத்தில் அடுத்தபடியாக 44,560 வாக்குகள் வித்தியாசத்தில் உடுமலை தொகுதி பொள்ளாச்சி வ.ஜெயராமன் (அதிமுக), 41,765 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கயம் தொகுதி என்.எஸ்.என். நடராஜன்(அதிமுக), 38,303 வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி கே.தங்கவேல்(மார்க்சிஸ்ட்) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மிக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அதிமு க கூட்டணி வெற்றி பெற்றிருப்பதற்கு இங்கு நிலவும் தொழில் பிரச்னையே முக்கியமாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தீர்க்கப்படாத சாயக்கழிவுநீர் பிரச்னையால் அனைத்து சாய, சலவை ஆலைகளும் பாதிக்கப்பட்டிருப்பது, கடுமையான நூல் விலையேற்றம், தொடர் மின்தடை, விலைவாசியுயர்வு, அடிப்படை தேவையான குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வற்ற நிலை போன்றவற்றால் திருப்பூர் மாவட்ட தொழில் வளம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்னை குறித்து தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டபோதும் தகுந்த நேரத்தில் தீர்க்கப்படாதது தொழில்துறை, தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்தரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதுவே திருப்பூர் மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தேர்தலை அடுத்து புதியதாக ஆட்சியமைக்கும் அரசு மக்களின் பாதிப்புகளை புரிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT