பாலையப்பட்டியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை
திருக்காட்டுப்பள்ளி, ஆக. 15: பாலையப்பட்டி வடக்கு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று கிராமசபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பூதலூர் ஒன்றியம், பாலையப்பட்டி வடக்
திருக்காட்டுப்பள்ளி, ஆக. 15: பாலையப்பட்டி வடக்கு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று கிராமசபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பூதலூர் ஒன்றியம், பாலையப்பட்டி வடக்கு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அ. கந்தசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள தக்கானதெரு, காத்தாடிப்பட்டி, சிதம்பரப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், மின்சாரம், சாலைகள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் கந்தசாமி.
Advertisement
Advertisement