துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை
மணப்பாறை: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, துவரங்குறிச்சி பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) மின் விநியோகம் இருக்காது.
மணப்பாறை: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, துவரங்குறிச்சி பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மணப்பாறை செயற்பொறியாளா் ஆா். அன்புசெல்வன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டபுளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.