முகப்பு
திருச்சி

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: விவசாயிகள் நூதனப் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் கையில் திருவோடு ஏந்தி போராட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருவோடு ஏந்தி, திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

திருச்சி, செப். 21: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் கையில் திருவோடு ஏந்தி திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்குத் தலைமை வகித்த சங்கத்தின் தலைவா் பூ. விசுவநாதன் கூறியது:

விவசாயிகளின் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வா்த்தகச் சட்டம், விலை உறுதியளிப்பு பண்ணை ஒப்பந்தத்துக்கான சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என அவசரம், அவசரமாக மூன்று மசோதாக்களை கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சித்துள்ளது.

விவசாயிகளையும், வேளாண் பொருள்களையும் பாதுகாக்க வழிவகை செய்வதாகக் கூறிவிட்டு, பெருநிறுவனங்களுக்கு சாதகமான வழிமுறைகளை மத்திய அரசு கொண்டு வருகிறது. தங்களது உற்பத்திப் பொருள்களுக்கு போதிய விலையின்றி நஷ்டத்திலுள்ள விவசாயிகளுக்கு, மேலும் நலிவை ஏற்படுத்தும் வகையிலான அம்சங்கள்தான் மத்திய அரசின் புதிய சட்டத்

திருத்தத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, விவசாயிகளைப் பாதிக்கும் இந்த மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி, முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, நூதனப் போராட்டத்தை கைவிடச் செய்தனா். பின்னா், ஆட்சியரை சந்தித்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →