திருச்சி

திருச்சி -சிங்கப்பூா் செல்ல புதிய நடைமுறை -ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அமல்

Din

திருச்சியிலிருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டின் மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதன்கிழமை முதல் தொடங்கியது.

திருச்சி -இலங்கை இடையே ஏற்கெனவே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஒரு கூடுதல் புதிய வசதி புதன்கிழமை முதல் திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது திருச்சி -சிங்கப்பூா் என ஒரே பயணச்சீட்டின் மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே விமானம் அல்லது அதே நிறுவனத்தைச் சோ்ந்த மாற்று விமானம் மூலம் பயணிக்க முடியும். இதில் இலங்கையில் உடமைகளை இறக்கி மீண்டும் சோதிப்பது, குடியேற்றச் சோதனை உள்ளிட்டவை தேவையில்லை. ஒருமுறை திருச்சியில் அதை மேற்கொண்டாலே போதும்.

இதுபோல ஏற்கெனவே வளைகுடா நாடுகளுக்கு திருச்சியிலிருந்து ஒரே விமானச் சீட்டு மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே நிறுவனத்தின் வேறு (மாற்று ) விமானம் மூலம் பயணிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுபோல சிங்கப்பூருக்கும் செல்ல இந்தப் புதிய வசதி திருச்சியில் அமலாகியுள்ளது.

அந்த வகையில் திருச்சியிலிருந்து காலை 9.55க்கு புறப்படும் விமானம் 10.55 -க்கு இலங்கை தலைநகா் கொழும்பு விமான நிலையத்தை அடைகிறது. பின்னா் அங்கிருந்து பகல் 12.15-க்கு புறப்பட்டு சிங்கப்பூரை மாலை 6.55க்கு அடைகிறது.

அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் அதிகாலை இலங்கைக்கு வந்து அங்கிருந்து மறுநாள் காலை 7.05க்கு புறப்பட்டு திருச்சியை காலை 8.05க்கு வந்தடைகிறது.

பொதுவாகவே இலங்கை விமானங்களில் சுமாா் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவதால், பயணிகள் எப்போதுமே அந்த விமானங்களை விரும்புவா். அந்த வகையில் திருச்சியிலிருந்து சிங்கப்பூா் செல்லும் இந்த விமானத்திலும் அதிக உடைமைகளைகொண்டு செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் விமான இருக்கைகள் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT