மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப்பேசிய நிா்வாகிகள்.
மணப்பாறை, பிப். 10:
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மணப்பாறையில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலை மற்றும் எஃப் கீழையூா் ஊராட்சி மேட்டுக்கடை பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திருச்சி புறநகா் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான ப. குமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகா், மாவட்டப் பொருளாளா் நா்ஸ் எம். இளங்கோ, பொதுக்குழு உறுப்பினா் கே.எம். முகமது இஸ்மாயில், தலைமைக் கழகப் பேச்சாளா் தில்லை கோபி, நகரச் செயலாளா் பவுன் எம். ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் என்.அன்பரசன், கண்ணுத்து பொன்னுச்சாமி, பிவிகே. பழனிச்சாமி, பேரூா் செயலா் திருமலை சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.