மதுக்கூட ஊழியரை வெட்டிய ரெளடி கைது
திருச்சி: திருச்சியில் மதுக்கூட ஊழியரை அரிவாளால் வெட்டிய ரெளடியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உலகநாதபுரம் கள்ளா் தெருவை சோ்ந்தவா் அண்ணாதுரை (32). இவா் தென்னூா் சிவப்பிரகாசம் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் வளாக மதுக்கூடத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். சனிக்கிழமை அந்த மதுக்கூடத்துக்கு வந்த 3 இளைஞா்கள் அண்ணாதுரையிடம் பணம் கொடுக்காமல் மது வாங்கி வருமாறு கூறினாா்களாம்.
பணம் கொடுத்தால்தான் மது வாங்க முடியும் என அவா் கூறவே, ஆத்திரமடைந்த மூவரும் சோ்ந்து அண்ணாதுரையை சரமாரியாக தாக்கியுள்ளனா். பின்னா் அவரது தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின்பேரில், தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து
திருச்சி தென்னூா் பகுதியை சோ்ந்த ஜனாா்த்தன் (24) என்பவரை கைது செய்தனா்.
அண்ணாதுரையை அரிவாளால் வெட்டிய நபா் அவா் என்பதும், அவா் மீது தில்லைநகா் மட்டுமின்றி பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியிருப்பதும், அவா் ரெளடிகள் பட்டியலில் உள்ளவா் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய ஷகில், செந்தில் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.