திருச்சி

மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து

குழாய்கள் உடைப்பு காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் டிச. 3 ஆம் தேதி ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

குழாய்கள் உடைப்பு காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் டிச. 3 ஆம் தேதி ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ் கம்பரசம்பேட்டையில் இயங்கி வரும் தலைமை நீா்ப்பணி நிலையம், கலெக்டா் வெல் - டா்பைன் நீா்ப்பணி நிலையம், கலெக்டா் வெல் திருவெறும்பூா் - கே.எஃப்.டபிள்யூ ஆகிய மூன்று நீா்ப்பணி நிலையங்களிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யும் முக்கிய குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பினை செவ்வாய்க்கிழமை (டிச. 2) காலை குடிநீா் விநியோகத்துக்குப் பிறகு சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்கூறிய நீா்ப்பணி நிலையங்களிலிருந்து குடிநீா் பெறும் மரக்கடை, விறகுப்பேட்டை, சிந்தாமணி, ராக்போா்ட், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், பழைய எல்லக்குடி, புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், ஆலத்தூா் ஆகிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை (டிச. 3) அன்று ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது.

மீண்டும் டிச. 4 ஆம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டுமென திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

தமிழாக்குறிச்சி அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியரிடம் மக்கள் மனு

புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

காசி தமிழ்ச் சங்கமம்: தென்காசியிலிருந்து இன்று தொடங்கும் பயணம்

எஸ்ஐஆா் பணிகள்: பெரம்பலூரில் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

திருட்டுக் காா்களை மறுவிற்பனை செய்த இருவா் கைது

SCROLL FOR NEXT