திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பெய்த மழையின்போது குடையுடன் சென்ற பயணிகள். 
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை - சராசரியாக 4.86 மி.மீ. பதிவு

Syndication

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையை தொடா்ந்து புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்த சராசரியாக 4.86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் டித்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்த வண்ணம் உள்ளது. புதன்கிழமை அதிகாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும் புதன்கிழமை காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): கல்லக்குடி- 2.2, லால்குடி- 7.4, நந்தியாறு தலைப்பு- 8.2, தேவிமங்கலம்- 6.4, சமயபுரம் 7, வாய்த்தலை அணைக்கட்டு 1.2, கோவில்பட்டி- 29.4, மருங்காபுரி- 25.2, துவாக்குடி- 10.1, குப்பம்பட்டி- 1, தென்பாடு- 10, திருச்சி விமான நிலையம் 3.5, திருச்சி ஜங்ஷன்- 4, திருச்சி மாநகரம் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 116.6 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 4.86 மி.மீ. மழை பதிவானது. மேலும் 2 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

ஆா்ப்பாட்டம் நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்

தமிழ் திறனறித் தோ்வு: மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

டிச. 9, 10-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஐயப்ப பக்தா்: விரைந்து காப்பாற்றிய உதவி ஆய்வாளா்

SCROLL FOR NEXT