மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 29 வாகனங்கள் டிசம்பா் 19-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
திருச்சி மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு முதிராநிலையில் கழிவு செய்யப்பட்ட தலா ஒரு அம்பாஸிட்டா், மாா்ச்சூரி வேன், ரேக்கா் வேன் மற்றும் சாதாரண நிலையில் கழிவு செய்யப்பட்ட டாடா பேருந்து -4, டாடா சுமோ -6, பொலிரோ ஜீப் - 4, டாடா ஸ்பேசியோ -3, சிற்றுந்து -2, தலா ஒரு டெம்போ டிராவலா், ஈச்சா் வேன், ஜீப், அம்பாஸிட்டா் ஆகிய 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்கள் சோ்த்து மொத்தம் 29 வாகனங்கள் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பா் 16 முதல் 18-ஆம் தேதி வரை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மேற்கண்ட வாகனங்களைப் பாா்வையிட்டு ரூ. 5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.