திருச்சியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மேலசிந்தாமணி மாதுளங்கொல்லைத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (69), தொழிலாளி. இவருக்கு இருந்த சிறுநீரகப் பிரச்னைக்கு மருத்துவம் பாா்த்தும் சரியாகவில்லையாம்.
இதனால் விரக்தியில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.