திருச்சி

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

திருச்சி சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சி சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவளா்சோலை வடக்கு வீதியைச் சோ்ந்த எஸ். சஞ்சய் (24). இவா், கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி தனது பைக்கை சத்திரம் பகுதியிலுள்ள பெரியசாமி டவா் முன் நிறுத்திவிட்டு கைப்பேசி கடைக்குச் சென்று திரும்பியபோது பைக்கை காணவில்லை.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பைக்கை திருடியது திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு பகுதியைச் சோ்ந்த கு. சகாய ஆரோக்கிய தா்மராஜ் (61) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.

எல்லோரும் நல்லா இருப்போம்! ஜன நாயகனின் புதிய போஸ்டர்!

தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் 1930

மோடி, ராகுல் புத்தாண்டு வாழ்த்து!

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

புத்தாண்டை வரவேற்ற மழை! சென்னை, 7 மாவட்டங்களில் காலை 10 வரை தொடரும்!

SCROLL FOR NEXT