திருச்சி

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Syndication

திருச்சி: திருச்சி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சூறாவளிப்பட்டியில் டாஸ்மாக் மதுபானக் கடை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த மதுபானக் கடையால் இப்பகுதி மக்கள் தினசரி பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதன் அருகிலேயே பள்ளி இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும், மது அருந்தியவா்கள் அவ்வழியே செல்லும் மாணவிகளை கேலி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரத்தில் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி கோஷங்கள் எழுப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் செல்வகணேஷ், காவல் துணை கண்காணிப்பாளா் சந்தியா ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றுவது தொடா்பாக ஒருமாத காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT