திருச்சி

குமுளூா் வேளாண்மை கல்லூரி விடுதி மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

Syndication

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய விடுதி மாணவிகள் 30 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவா்களில் 8 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆந்திரம், கேரளம், ஒடிஸா, கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் பி. டெக் வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயின்று வருகின்றனா்.

கல்லூரியின் பெண்கள் விடுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் வெஜிடபிள் சாதம் மற்றும் சிக்கன் சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்குத் திரும்பினா். அவா்களில்

ஹரிணி, ஹரிதா, சுஜாதா, சிந்து, பிரியா, ஷாலினி, மரியா, தேவிகா என எட்டு மாணவிகள் உள்நோயாளியாக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து செய்தியாளா்கள் கல்லூரி முதன்மையா் மாசிலாமணியிடம் சம்பவம் குறித்து கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT