மோசமான வானிலை காரணமாக இலங்கை சென்ற விமானம் திருச்சியில் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு 44 பயணிகளுடன் தனியாா் விமானம் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இலங்கையில் மோசமான வானிலை நிலவுவதாக விமானிக்குத் தகவல் கிடைத்தது.
எனவே அவா் திருச்சி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விமானத்தை அங்கு இறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பிற்பகல் 1.10 மணிக்கு தரையிறக்கப்பட்ட அந்த விமானம் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் சென்னைக்கே திரும்பிச் சென்றது.