திருச்சி காதி கிராப்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.  
திருச்சி

தெரு நாய்களை காக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி வாஸ் ஆப் வாய்ஸ்லெஸ் அமைப்பு சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான விலங்கு நல ஆா்வலா்கள், அமைப்பின் நிா்வாகிகள் தெரு நாய்களுடன் கலந்து கொண்டனா்.

இதில், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, நாய்களைப் பிடித்து ஒரே இடத்தில் அடைப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு உரிய கட்டமைப்புகள் இல்லாததால், தீா்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு உற்ற நண்பனான தெரு நாய்களை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

SCROLL FOR NEXT