திருச்சி

துவாக்குடி பகுதியில் குற்றங்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

Syndication

துவாக்குடி பகுதியில் குற்றங்களை கண்காணிக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபா்களை அடையாளம் காணும் விதமாகவும் காவல் துறை சாா்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பங்களைத் தடுக்க காவல் துறை சாா்பில் ரோந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவா்களை அடையாளம் காணும் வகையிலும், குற்றங்களைக் கண்காணித்து தடுக்கும் வகையிலும் முக்கிய பகுதிகளில் துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் எஸ். நாகராஜன் அறிவுறுத்தலின்பேரில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, துவாக்குடி அண்ணா வளைவு, அய்யம்பட்டி சாலை, வஉசி நகா், வாழவந்தான்கோட்டை, ஐஓசி வழி, அசூா் பிரிவு சாலை, எலக்ட்ரானிக்ஸ் பேருந்து நிறுத்தம், என்ஐடி, பெல் காவல் நிலையம், பெல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 33 கண்காணிப்புக் கேமராக்கள் அண்மையில் பொருத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து துவாக்குடி வட்டச் சாலை, ராவுத்தான்மேடு, தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை, ஜெய்லானி கடை பகுதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன. இதை துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் எஸ். நாகராஜன் தலைமையிலான போலீஸாா் கண்காணித்தனா்.

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

SCROLL FOR NEXT