திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கேட்டை சேதப்படுத்திய வெளிநாட்டு கைதிகள் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் பலா் உள்ளனா். அவா்களை வழக்கிலிருந்து விடுவித்தாலும் சொந்த நாட்டுக்குத் திரும்பும் வரை சிறப்பு முகாமிலே அடைக்கப்பட்டிருப்பா்.
இந்நிலையில், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஃபிரான்சிஸ் (30), பீட்டா் (42), யூசுஃப் (30), ஜேம்ஸ் (27) ஆகிய 4 கைதிகளும் சிறப்பு முகாமின் 3-ஆவது கேட் அருகே திங்கள்கிழமை பிற்பகல் திரண்டு ரகளையில் ஈடுபட்டதுடன், கேட்டையும் சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் கொட்டப்பட்டு இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமின் சிறப்பு மண்டல துணை ஆட்சியா் சந்தான லட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மேற்கண்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.