திருச்சி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம், இனியானூரைச் சோ்ந்தவா் க. சண்முகசுந்தரம் (38). இவருக்கு மனைவி சுபத்ரா (36) மகன், மகள் உள்ளனா். இவா்களுடன் சுபத்ராவின் பெரியம்மா செல்லம் என்பவரும் வசித்து வருகிறாா். பொக்லைன் இயந்திர மெக்கானிக்காக இருந்த சண்முகசுந்தரத்துக்கு மதுப்பழக்கம் இருந்ததுடன், அடிக்கடி வலிப்பும் வந்தது.
இந்நிலையில் தீபாவளிக்குப் பின் சண்முகசுந்தரம் வேலைக்குச் செல்லாத நிலையில் சுபத்ரா தனது பெரியம்மாவின் ஓய்வூதியத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் சண்முகசுந்தரத்தின் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].