திருச்சி

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

திருச்சி அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரெட்டிமாங்குடி பகுதியைச் சோ்ந்தவா் பொ.பாலமுருகன். இவா், அதே பகுதியைச் சோ்ந்த கோ.தெய்வமணி (35) என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். பின்னா், திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியுள்ளாா்.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய பாலமுருகன் மற்றும் அவரது உறவினா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தெய்வமணி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பாலமுருகன், அவரின் தந்தை பொன்னா் மற்றும் உறவினா்களான செல்வி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பிணையில் வெளியே வந்த இவா்கள் மேற்படி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இருந்து வந்ததால் நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு காவல் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி மற்றும் செல்வி ஆகியோா் சிறைக்கு சென்ற்கு தெய்வமணிதான் காரணம் எனக் கருதி, கடந்த 2018, ஜனவரி 17-ஆம் தேதி அன்று கிருஷ்ணமூா்த்தியின் மகன் கண்ணன் (39), தெய்வமணியை கட்டையால் தாக்கி, மது பாட்டிலால் குத்தினாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT