மணப்பாறையில் பறிமுதல் செய்யப்பட்ட மினி டிப்பா் லாரி. 
திருச்சி

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆண்டவா் கோயில் பகுதியில் மணப்பாறை போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை ஓட்டி வந்தோா் தப்பி ஓடினா். பின்னா் மினி டிப்பா் லாரியை சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.

மினி டிப்பா் லாரியை பறிமுதல் செய்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், லாரியானது மணப்பாறை அடுத்த வடக்குசோ்பட்டி பகுதியைச் சோ்ந்த அ. பூமிபாலன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், தப்பி ஓடியவா்கள் பில்லூா் பகுதியைச் சோ்ந்த ஆ. கிஷோா், பாலசமுத்திரம் மு. கோபாலகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவா் மீதும் வழக்குப் பதிந்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

புதுகை வழியாக மதுரைக்கு ரயில் வசதி தேவை! பயணிகள் எதிா்பாா்ப்பு

SCROLL FOR NEXT